mangaLAsAsanam

ஸ்ரீ: ஸ்ரீ மஹாபூர்ண குரவே நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பெரிய நம்பி

periya nambi

திருநக்ஷத்ரம் – மார்கழி கேட்டை

தனியன்

கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

வாழி திருநாமம்

அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே


பெரிய நம்பிகளின் திருக்குமாரரும், உடையவர் நியமன 74 சிம்மாஸனாதிபதிகளில் ஒருவருமான புண்டரீகாக்ஷர்

திருநக்ஷத்ரம் – ஆடி உத்திராடம்

தனியன்

சுசௌமாஸ்யுத்தராஷாடா ஜாதம் பூர்ணகுரோஸ் ஸுதம் |
யதிராஜாங்க்ரி ஸத்பக்தம் புண்டரீகாக்ஷமாச்ரயே ||


பெரிய நம்பி ஸ்ரீ ரெங்காசாரியர் ஸ்வாமி (44 – வது திருவம்சம்)

திருநக்ஷத்ரம் – வைகாசி உத்திரட்டாதி

தனியன்

ஸ்ரீமத் பூர்ணகுலாப் தீந்தும் வேதாந்தத் வயபாரகம் |
ஸ்ரீந்ருஸிம்ஹார்ய தநயம் ஸ்ரீரங்கார்யமஹம் பஜே II

வாழி திருநாமம்

மட்டவிழும் பொழிலரங்கம் மகிழ வந்தோன் வாழியே
மஹா பூர்ண வம்சந்தன்னில் வந்த வள்ளல் வாழியே
இட்டமுடன் அடியார்கட்கு இதம் உரைப்போன் வாழியே
இடப உத்திரட்டாதியில் இங்கு உதித்தான் வாழியே
சிட்டர் தொழும் ஸ்ரீநிவாஸாசார்ய செல்வ மைந்தன் வாழியே
சீலமுடன் தென்னரங்கனைத் தினம் தொழுவோன் வாழியே
பட்டர்பிரான் பிரபந்தார்த்தம் பகருமவன் வாழியே
பார்புகழும் ரங்காச்சாரியன் பதாம்புயங்கள் வாழியே

வண்டறையும் பொழிலரங்கம் வாழ வந்தோன் வாழியே
வைகாசி உத்திரட்டாதியில் வந்து உதித்தான் வாழியே
தெண்டிரை சூழ் அரங்கர்தாள் தினம் தொழுவோன் வாழியே
தேசம் புகழ் பெரியநம்பி திருக்குலத்தோன் வாழியே
கண்டவர் தம் சிந்தைகவரும் கருத்துடையோன் வாழியே
காதலுடன் ஸ்ரீநிவாஸாசார்யன் கழல் பணிவோன் வாழியே
எண்டிசையும் சடகோபன் அருளை இயம்புபவன் வாழியே
எங்கள் அரங்காச்சார்யன் இணையடிகள் வாழியே


ஸ்ரீ பெரியநம்பி நரசிம்மாசாரியர் (45 – வது திருவம்சம்)

தனியன்

ஸ்ரீரங்கார்யகுரோ; ஸூநும் தீஷமாதிகுணார்ணவம் |
ஸ்ரீபூர்ணப்ரவணம் வந்தே ஸ்ரீந்ருஸிம்ஹமஹாகுரும் ||

வாழி திருநாமம்

அருள்கூர்ந்து அடியவர்க்கு இதமுரைப்போன் வாழியே
அழகாரும் அரங்கநகர் அமர்ந்தசெல்வன் வாழியே
பத்தியுடன் ஆழ்வார்கள் பதம் பணிவோன் வாழியே
பார்புகழும் பெரியநம்பி பதமலரோன் வாழியே
கார்மேனி அருளாளர் கழல் தொழுவோன் வாழியே
மார்கழியில் விசாகத்துதித்த வள்ளல் வாழியே
ஏராரும் அரங்கனையே சிந்தைசெய்வோன் வாழியே
எழில் நரசிம்மகுரு இணையடிகள் வாழியே

ஸ்ரீ பெரியநம்பி நரசிம்மாசாரியார் திருவடிகளே சரணம்


ஸ்ரீ பெரியநம்பி சுந்தரராஜாசாரியர் (45 – வது திருவம்சம்)

தனியன்

ஸ்ரீ பூர்ணவம்ஸாம்புதிபூர்ணசந்த்ரம் ஸ்ரீரங்கஸத்தேஸிகபுத்ரரத்நம் |
தத்பாதயுக்மாம்புஜப்ருங்கராஜம் ஸ்ரீஸுந்தராசார்யமஹம் ப்ரபத்யே||

வாழி திருநாமம்

அருள்வரதர் அடியிணைக்கீழ் அன்புடையோன் வாழியே!
அம்புவியில் ஆழ்வார்கள் அடிதொழுவோன் வாழியே!
பத்தியுடன் அரங்கன் பதம் பணியுமவன் வாழியே!
பராங்குசன்தன் தாளிணையைப் பற்றினான் வாழியே!
கார்த்திகையில் திருவோணத்துதித்த செல்வன் வாழியே!
கருணைமிகு பெரியநம்பி கழல் தொழுவோன் வாழியே!
ஏற்றமிகு உலகாரிய பதம் சிந்தை செய்வோன் வாழியே!
எழில் சுந்தராரிய பதம் இனிதூழி வாழியே!

ஸ்ரீ பெரியநம்பி சுந்தராஜாசாரியர் திருவடிகளே சரணம்

2 thoughts on “mangaLAsAsanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *